மாத்தளை, நாவுல – பகமுன வீதியில் மொரகஹகந்த பகுதியில், இரண்டு லொரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
47 வயது ஆண் மற்றும் 41 வயது பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும், கொங்கஹவெல பகுதியில் நடந்த மரண சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது இந்த விபத்தை எதிர்நோக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி லொறியுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் கூறினர்.
Link : https://namathulk.com