இன்றிலிருந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடுகளை சமர்பிக்குமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்றிலிருந்து நடைபெறும் எந்தவொரு மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள் அல்லது ஒன்லைன் வகுப்புக்கள் தொடர்பில் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் – 0112421111
பொலிஸ் அவசர பிரிவு – 119
பரீட்சைகள் திணைக்களம் – 1911
பாடசாலை பரீட்சைகள் மற்றும் முடிவுகள் கிளை – 011 278 4208 / 011 278 4537
2024 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய பாடசாலை வகுப்புகள் மற்றும் ஒன்லைன் வகுப்புக்கள் உட்பட அனைத்து வகையான மேலதிக வகுப்புகளும், இன்று நள்ளிரவு முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com