யாழ்ப்பாணம்- கோண்டாவில் மேற்கு பகுதியை சேர்ந்த ரகுதாஸ் நிலக்சி, கனடாவில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
கனடாவின், மார்க்கம் நகரத்தில் வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை துப்பாக்கிச்சூட்டில் இவர் உயிரிழந்ததுடன், ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த யுவதி தங்கியிருந்த வீட்டின் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறினர்.
இதன்போது வீட்டில் வளர்க்கப்பட்ட நாயும் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காணொளிகளை பொலிசார் வெளியிட்டுள்ள போதிலும், இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com