முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அல் ஜசீரா சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
பட்டலந்த முகாம் தொடர்பில் அவர் கூறிய கருத்துக்கள் பாரிய பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்ட பின்னர் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கூறியுள்ளார்.
Link : https://namathulk.com