தரவரிசைப்படுத்தப்பட்ட வைத்தியர்களின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ள நிலையில், அந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின் படி, அனைத்து விண்ணப்பங்களும் ஒன்லைன் முறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வைத்தியர்களும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் https://hrmis.health.gov.lk/ms/ என்ற உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.