LGBTQ+ சமூகம் குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட பயிற்சி.

Aarani Editor
1 Min Read
LGBTQ+

LGBTQ+ சமூகம் குறித்து பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்துவதற்கான புதிய பயிற்சித் திட்டம், கட்டான தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தில் நெதர்லாந்து தூதரகத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தின் கீழ் LGBTQ+ சமூகத்திற்கு வழங்கப்படும் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து சட்டத்துறை அதிகாரிகளிடையே விழிப்புணர்வை அதிகரிக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், LGBTQ+ சமூகத்தை சார்ந்தோர், பொலிஸ் நிலையங்களிலோ அல்லது சமூகத்திலோ எதிர்கொள்ளும் எந்தவொரு சவால்களிலும், பொலிஸ் அதிகாரிகள் தகுந்த முறையில் தலையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சித் திட்டத்தின் முதல் நாள் அமர்வு, நெதர்லாந்து தூதுவர் போனி ஹோர்பாக்கின் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

LGBTQ+ பிரச்சினைகள் குறித்த பொலிசாருக்கு புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டத்தின் கீழ் ஆரம்பக்கட்ட பயிற்சிகளுக்காக, 24 ஆலோசனை அதிகாரிகள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தில், ஈக்வைட் நிறுவனத்தின் ஆலோசகர்களால் ஐந்து நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link : https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *