அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையை எதிர்த்து, இன்று காலை 8:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாள பணி புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் வைத்திய நிபுணர்கள் சங்கம் என்பன தீர்மானித்துள்ளன.
நடந்த கொடூரமான தாக்குதல் குறித்து மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தச் செயலை சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இதுபோன்ற வன்முறை சுகாதார துறை பணியாளர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாமல், சுகாதார அமைப்பின் நேர்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதையும் வலியுறுத்தியுள்ளது.
எனவே, விரைவான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்தவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், சங்கம் அதிகாரிகளுக்கு போரிக்கை விடுத்துள்ளது..
வைத்தியர்களுக்கு, குறிப்பாக இரவு நேரங்களில் பணிபுரியும் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடங்கள் மற்றும் சிறந்த வசதிகளுக்கான அவசியத்தையும் சங்கம் இதன்போது வலியுறுத்தியுள்ளது.
Link : https://namathulk.com