அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று கல்னேவ பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 08.00 மணி முதல் நாடு தழுவிய ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தையும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com