அநுராதபுரம் வைத்தியர் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பில் கைதாகிய சந்தேகநபர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சந்தேகநபர் மற்றுமொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
34 வயதான சந்தேகநபர் கல்னேவ பகுதியில் பிக்குவாக வசித்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அத்துடன் அவர் இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவராவர்.
பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை கண்டித்து அரச வைத்தியர்கள் இன்று நாடு தழுவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Link : https://namathulk.com