15 வயதுக்கு மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோர்களுக்கான தேசிய அளவிலான போட்டிகளை அவசரமாக அறிவித்தது தொடர்பாக இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி இடைநீக்கம் செய்திருந்தது.
குறித்த இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இரத்துச் செய்துள்ளது.
இதன்காரணமாக உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான அணிகளைத் தேர்வு செய்யவும் முடியும்.
இடைநீக்க இரத்து குறித்த உத்தரவில், “இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சரியான நடவடிக்கையே எடுத்துள்ளது. அதனால், இடை நீக்கத்தை இரத்துச் செய்ய முடிவு செய்துள்ளது.” என்று விளையாட்டுத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Link : https://namathulk.com