பாகிஸ்தானில் 300 இரயிற்பயணிகள் தீவிரவாதக் குழுக்களால் பணயக் கைதிகளாக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கும் ஆயுதக் குழுக்கழுக்குமிடையே துப்பாக்கிச் சூட்டு மோதல் இடம்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை, பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள போலான் மாவட்டத்தில் ஒரு சுரங்கப்பாதைக்குள் நுழைந்தபோது கடத்தப்பட்ட ரயிலில் இருந்த 450 பேரில் 150 க்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
பணயக்கைதிகள் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட உடைகளை அணிந்த தீவிரவாதிகளால் சூழப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியதால் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையாகச் செயற்பட்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அதிக எண்ணிக்கையான பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பலூச் விடுதலை இராணுவக் குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று, கைதிகளை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது.
இதுவரை கிளர்ச்சியாளர்களிடமிருந்து வந்த சலுகைக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com