எழில் கொஞ்சும் மலையகத்தில் மாத்தளை மாநகரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்பிகையின் இரதோற்சவம் இன்று நடைபெறுகிறது.
இன்று காலை இடம்பெற்ற விசேட வசந்தமண்டப பூஜையின் பின்னர், அம்பாள் பரிவார மூர்த்திகளுடன் ஆலயத்திலிருந்து புறப்பட்டாள்
தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அம்பிகை தேரில் ஆரோகனிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஆலயத்திலிருந்து வீதி உலா செல்லும் அம்பிகை , பக்தர்களுக்கு அருளாசி புரிந்து நாளை காலை மீண்டும் ஆலயத்தை வந்தடையவுள்ளர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் இரதோற்சவம் இடம்பெறுகிறது
Link : https://namathulk.com