அமெரிக்காவிற்கும் உக்ரேனுக்குமிடையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடி 30 நாள் போர்நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் கூறியுள்ளது.
ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கிக்கும் டிரம்பிற்கும் இடையில் இடம்பெற்ற அசாதாரண மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ரஷ்யாவுக்கு இந்த வாய்ப்பை வழங்குவதாகத் தெரிவித்தார்.
ரஷ்யாவை “நேர்மறையான” முன்மொழிவுக்கு ஒப்புக் கொள்ளுமாறு சமாதானப்படுத்துவது இப்போது அமெரிக்காவைப் பொறுத்தது என உக்ரேனின் ஜனாதிபதி வோலோடோமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
“இரு பிரதிநிதிகளும் தங்கள் பேச்சுவார்த்தைக் குழுக்களை பெயரிடவும், உக்ரேனின் நீண்டகால பாதுகாப்பை வழங்கும் நீடித்த அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்கவும் ஒப்புக்கொண்டனர்” என்று அமெரிக்க-உக்ரைன் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பினிடையே ஜெலென்ஸ்கியை மீண்டும் வாஷிங்டனுக்கு அழைக்கத் தயாராக இருப்பதாக மார்கோ ரூபியோ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com