விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காகவும், பொதுப் போக்குவரத்தை அணுகுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதற்கும், பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் ஒருங்கிணைந்த உதவி மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த மையம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த உதவி மையத்தில் விசேட தேவையுடைய ஊழியர்கள் மட்டுமே சேவைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
Link : https://namathulk.com