ஸ்ரீலங்கன் விமானத்தில் பெண் விமானப் பணிப்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 65 வயது பயணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுவீடன் நாட்டு பிரஜையான குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட பின்னர், அவரின் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் மருத்துவ பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் இருந்து நேற்று பயணித்த சந்தேகநபர், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய போது கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் விமான நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com