அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமை தொடர்பில் மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபரின் சகோதரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பிரதான சந்தேகநபர் குற்றச்செயலில் ஈடுபட்ட பின்னர் அவர் தலைமறைவாகியிருப்பதற்கு அடைக்கலம் வழங்கியமை, வைத்தியரிடமிருந்து திருடப்பட்ட கையடக்க தொலைபேசியை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமை தொடர்பில் கல்னேவ பகுதியை சேர்ந்த பிக்கு ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று நாடளாவிய ரீதியில் மணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com