நடிகர் ஜெயம் ரவி தற்போது தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றியுள்ள நிலையில் தற்போது தான் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் வேலைகள் நிறைவடைந்த பின்னர் இயக்குநராக அவதாரம் எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக படப்பிடிப்புக்கு இடையே திரைக்கதை அமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
அவரே தயாரித்து, இயக்கவும் முடிவு செய்துள்ள அத் திரைப்படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும், இக்கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com