உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்குமிடையான போர்நிறுத்த விடயங்கள் தொடர்பாக சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் உக்ரேனுக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் ரஷ்யாவுடனான 30 நாள் போர்நிறுத்தத்திற்கு உக்ரேன் தயார்நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
போர்நிறுத்தத்தை மாஸ்கோ ஏற்றுக்கொள்வதற்கான சாதகமான அறிகுறிகள் இருப்பதாக தான் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார், ஆனால் எந்தவொரு ஒப்பந்தத்தையும் மீறும் நடவடிக்கை காணப்பட்டால் பொருளாதார ரீதியாக ரஷ்யாமீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் போர்நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைனின் கூட்டாளிகளை ஏமாற்றாது இருப்பதை உறுதி செய்யுமாறு வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“இதிலுள்ள முக்கிய காரணி என்னவென்றால், ரஷ்யா ஏமாற்றாமல் போரை உண்மையாக முடிவுக்குக் கொண்டுவர தயாராக இருப்பதை உறுதி செய்வது நமது கூட்டாளிகளின் திறன் ஆகும். ஏனென்றால் இப்போதும் ரஷ்ய தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை ” என்று உக்ரேனிய தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Link : https://namathulk.com