துபாயில் நடைபெற்ற 09வது சர்வதேச சாம்பியன்ஸ் டிராபி துடுப்பாட்டப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் துடுப்பாட்டத் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் இறுதிப் போட்டியில் 76 ஓட்டங்களை எடுத்த அணித்தலைவர் ரோஹித் சர்மா, இரண்டு இடங்கள் முன்னேறி தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி ஒரு இடத்தை இழந்து 5வது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளார்.
ஸ்ரேயஸ் ஐர் 8வது இடத்திலும் நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தையும் ரச்சின் ரவீந்திரா 14 இடங்கள் முன்னேறி 14வது இடத்தையும், கிளென் பிலிப்ஸ் 6 இடங்கள் முன்னேறி 24வது இடத்தையும் பட்டியலில் பிடித்துள்ளனர்.
Link : https://namathulk.com