அம்பாறை, காரைதீவு விபுலானந்த விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டரங்கம், மிக மோசமாக பாதிக்கப்பட்டு கவனிப்பாரற்று காணப்படுகிறது.
சுனாமிக்கு பின்னர் அரச சார்பற்ற நிறுவனமொன்றால் அமைக்கப்பட்ட இந்த நவீனரக அரங்கம் இன்று பாவிக்க முடியாத நிலையிலுள்ளது.
அரங்கத்தின் கூரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , தகரங்கள் எந்நேரமும் கீழே விழக்கூடிய அபாயம் உள்ளது.
அண்மையில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டது.
ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விளையாட்டு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Link : https://namathulk.com