மெக்ஸிக்கோவின் தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் உள்ள எரிமலையொன்றில் எரிமலை வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிமலை குவாத்தமாலாவின் தலைநகரில் இருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 2300 அடி (3763 மீட்டர்) உயரமுள்ள இயங்கு நிலையிலுள்ள ஒன்றாகும்.
இது கடைசியாக 2023ஆம் ஆண்டின் ஜூன் மாதமளவில் வெடித்தது.
தற்போது குறித்த பிரதேசத்திலுள்ள 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் மேலும் 30,000 பேர் ஆபத்தில் இருக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவம் கடந்த திங்களன்று ஆரம்பித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புக்கள் குறித்து உடனடியாகத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பொதுவாக எரிமலைகளிலிருந்து வரும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் சாம்பல், பாறை, மண் மற்றும் குப்பைகள் ஆகியவற்றின் கலவையாக இருக்கும் லாவாக் குழம்பாகும். அவை முழு நகரங்களையும் புதைக்கக் கூடியவையாகக் காணப்படும்.
குறித்த எரிமலை வெடிப்பில் எரிமலைப் பொருட்களின் ஓட்டம் மிதமானதாக இருந்தாலும் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குவாத்தமாலாவின் பேரிடர் தொடர்பான நிறுவனம் தெரிவித்துள்ளது.
Link : https://namathulk.com