சோழன் உலக சாதனை படைத்த 29 மாதங்களே ஆன மட்டக்களப்பை சேர்ந்த குழந்தை துயந்தன் மகிஷரானை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
குறித்த குழந்தை, அதிக ஞாபகத் திறன் மூலம் 650 க்கும் மேற்பட்ட பட அட்டைகளின் பெயர்களை அடையாளம் கண்டு ஒப்புவித்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் மட்டக்களப்பு நாவற்குடாவில் வசித்து வரும் வைத்தியர் தர்ம சுந்தரம் மற்றும் வைத்தியர் ராமஜினி துஷ்யந்தன் ஆகியோரின் குழந்தை ஆவார்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மற்றும் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் என்பன இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வானது சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது
இலங்கைக்கான சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் துணைச் செயலாளர் கதிரவன் த. இன்ப ராசா தலமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண சபை பிரதி பிரதம செயலாளர் கோபாலரத்தினம் கலந்து கொண்டார்.
இதன்போது, சோழன் உலக சாதனை தங்கப்பதக்கம், சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், சோழன் சின்னம், சோழன் உலக சாதனை விவரம் அடங்கிய கோவை மற்றும் நினைவு கேடயம் என்பன சாதனை படைத்த துயந்தன் மகிஷராவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன், சோழன் உலக சாதனை புத்தகத்தில் கிழக்கு மாகாணத்தில் இடம்பிடித்த மிகக்குறைந்த வயதுடைய குழந்தை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com