தமிழ் மக்கள் கூட்டணி, மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட ஆர்வமாகவே உள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, சிலகட்சிகள் தங்களுடைய தனித்துவத்தை முன்வைத்து தங்களுடைய தனித்துவத்தை சிதைக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது தமக்கு பிரச்சினைகள் ஏற்படுவதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அத்துடன், ஆரம்பத்தில் ஜக்கிய தேசிய கட்சியும், மொட்டு கட்சியும் இணைந்து போட்டியிட்ட போதிலும் அவர்கள் தங்கள் தனித்துவத்தை பாதுகாத்து கொண்டதாகவும் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இதனை போன்றதான ஒரு செயற்பாட்டினை இந்த இணைவில் பரீட்சித்து பார்க்க முயன்ற போதிலும் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் செயலாளர் நாயகம் கூறினார்.
இதன் அடிப்படையிலேயே, தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததாகவும் செயலாளர் நாயகம் வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com