பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளின் கணக்கெடுப்பை எதிர்வரும் 15திகதி நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விவசாய அமைச்சு எடுத்துள்ளது.
இதன்படி, விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள விலங்குகளை கணக்கெடுப்பதற்கு ஐந்து நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைவாக, விலங்கு கணக்கெடுப்பு எதிர்வரும் 15ஆம் திகதி காலை 08.00 மணி முதல் 08.05 மணி வரை நடத்தப்படும்.
அத்துடன், விலங்கு கணக்கெடுப்பை மிகவும் துல்லியமாக நடத்த விவசாய அமைச்சு, ஒரு செயல்பாட்டு அறையையும் நிறுவியுள்ளது.
குரங்குகள், இராட்சத அணில்கள் மற்றும் மயில்கள் போன்ற பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகள் குறித்த கணக்கெடுப்பை மேற்பார்வையிட ஒரு சிறப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com