பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் புகுடு கண்ணாவின் சகோதரர், பாலச்சந்திரன் புஷ்பராஜ் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், இன்று அதிகாலை விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவர் போலியான பயண ஆவணத்தைப் பயன்படுத்தி இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் நுழைய முயன்றதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கூறினார்.
அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் சந்தேகநபருக்குள்ள தொடர்புகள் குறித்து அதிகாரிகள் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
Link: https://namathulk.com