அம்பாறை, கல்முனை தலைமைய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு செய்பவர்கள் உட்பட அதிக ஒளி மற்றும் ஒலி எழுப்பும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வீதி போக்குவரத்து சீர்கேடு கலாச்சார சீர்கேடு உள்ளிட்டவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் பங்கேற்புடன் ஆரம்பமானது.
இதன்போது, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பிக்கும் போது அல்லது முடிவடையும் போது பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்யும் குறித்த நபர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் தருமாறு பொலிசார் கூறினர்.
மோட்டார் சைக்கிள்கள் திருடுதல், பொதுப் போக்குவரத்தை சீர்குலைத்தல், சட்டவிரோதமாக பொதுப்போக்குவரத்திற்கு பங்கம் விளைவித்தல், தான்தோன்றித்தனமாக வாகன தரிப்பு செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.