சுரக்ஷா வாரத்தை முன்னிட்டு சுரக்ஷா அட்டைகளை விநியோகிக்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் 1 முதல் 13 ஆம் வகுப்பு வரை படிக்கும் 5 முதல் 21 வயது வரையிலான மாணவர்கள் மற்றும் உதவி பெறும் விசேட பாடசாலைகளில் கல்விகற்கும் 4 முதல் 21 வயது வரையிலான 40 லட்சம் மாணவர்கள் வரை ‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டத்தை கல்வி அமைச்சு மற்றும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஆகியவை இணைந்து செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.
2024 ஜூலை முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என உரிய நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
இதற்காக, அரசாங்கம் 7,112 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
அதன்படி, மாணவர்களுக்கான சுகாதார காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் பின்வரும் பலன்களை பெறலாம்.
சுகாதாரக் காப்பீடு திட்டம் :
உள்நோயாளிகளுக்கான பலன்கள் – 300,000 ரூபா (அரச, தனியார் மருத்துவமனைகள்)
வெளிநோயாளிகளுக்கான பலன்கள் 20,000 ரூபா
தீவிர நோய்களுக்கான பலன்கள் – 1,500,000 ரூபா
விபத்துக் காப்பீடு திட்டம் :
முழு நிரந்தர இயலாமைக்கு – 200,000 ரூபா
நிரந்தர பகுதி இயலாமைக்கு – 150,000 ரூபா
தற்காலிக இயலாமைக்கு – 25,000 ரூபா முதல் 100,000 ரூபா வரை
ஆயுள் காப்பீடானது, ஆண்டு வருமானம் 180, 000 ரூபாவிற்கு குறைவான வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், ‘அஸ்வசும்’ திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் இல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் இறந்தால், குறித்த மாணவர்களுக்கு தலா 75,000 ரூபா வழங்கப்படும்.
ஒரு மரணத்திற்கு ஒதுக்கப்படும் அதிகபட்ச தொகை 225, 000 ரூபா ஆகும்.
மேலும், அந்த தொகை குடும்பத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமாக ஒதுக்கப்படும்.
இரண்டு பெற்றோர்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் இறப்புக்கு இந்த காப்பீடு தனித்தனியாக வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் பலன்களைப் பெற, உரிமைகோரல் படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பாடசாலை அதிபர் சான்றளித்து இலங்கை காப்புருது கூட்டுத்தாபனத்தின் https://www.srilankainsurance.lk/suraksha/ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Link : https://namathulk.com