முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு வலயகல்வி பணிமனைக்குட்பட்ட விசுவமடு பாரதி வித்யாலயத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக ஆய்வுக் கூடத்தை கையளித்தார்.
குறித்த விஞ்ஞான ஆய்வு கூடம் மாணவர்களின் நவீன கல்வி செயற்பாட்டுக்காக கணினிமையம் மற்றும் நூலகம் அடங்கலாக திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Link : https://namathulk.com