அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்குள் நுழையும் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு இறக்குமதி வரிகளை அறிமுகப்படுத்துவதற்கான தனது சமீபத்திய நடவடிக்கைகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடாவிலிருந்து பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, கூடுதல் கட்டணங்களை விதிக்க இருப்பதாக உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
தனது நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நிட்சயமாகப் பதிலளிப்பதாகக் கூறியுள்ளார்.
“அவர்கள் எங்களிடம் என்ன கட்டணம் வசூலித்தாலும், நாங்கள் அவர்களிடம் வசூலிக்கிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை டிரம்ப், எஃகு மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்க கட்டணங்களை விரிவுபடுத்துவதற்கான திட்டத்துடன் 25% வரியை விதித்ததோடு சில நாடுகளின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா முன்பு வழங்கிய வரி விலக்குகளை முடிவுக்கும் கொண்டுவந்தார்.
அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொருளாதாரங்கள் மற்றும் நுகர்வோர் மீதான தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் நிதிச் சந்தைகளை உலுக்கிய வர்த்தகப் போரின் தீவிரத்தை இந்த அச்சுறுத்தல் குறித்து நிற்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் படகுகள், போர்பன் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அமெரிக்க பொருட்களின் மீதான வரிகளை 26 பில்லியன் யூரோக்கள் வரை உயர்த்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது.
Link : https://namathulk.com