கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவின் முதல் நாள் வழிபாடுகள் இன்று நடைபெற்றது.
இராமேஸ்வரம் ஆயரின் தலைமையில் திருவிழா ஆரம்பமானது.
புனித அந்தோனியாரின் கொடி ஏற்றப்பட்டு வழிபாடுகள் ஆரம்பமாகியது.
இன்று மாலை 4 மணியளவில் திருச்செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருச்சிலுவை பாதை திருப்பலி கருணை ஆராதனையும் நடைபெற்றது.
நாளை காலை நடைபெறவுள்ள திருநாள் திருப்பலியுடன் திருவிழா நிறைவு செய்யப்படவுள்ளது
யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் உள்ளிட்ட, அருட்தந்தையர்கள், சகோதரர்கள், அருட் சகோதரிகள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்திய, இலங்கை நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இறை விசுவாசிகளின், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
Link: https://namathulk.com