இந்தியாவின் சிவகங்கை மாவட்டத்தின் மாதாபுரம் பிரதேசமானது கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதியாகக் காணப்படுகின்றது.
இளையங்குடி ஒன்றியத்தின் கரைக்குளம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள குறித்த கிராமத்தில் 50 கிறிஸ்தவக் குடும்பங்களும் 04 இந்துக் குடும்பங்களும் வசித்துவரும் நிலையில், இங்கு அனைவரும் நிதி திரட்டி ஒரு இந்துக் கோயிலுக்கு குடமுழுக்கு நடாத்திய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இங்கு ஊரின் குளத்தின் நடுவில் இருக்கும் மாணிக்கவள்ளி அம்மனை வணங்கியபின்பே அறுவடையை ஊர் மக்கள் ஆரம்பிப்பது வழக்கம். இந்தக் கோவில் பல ஆண்டுகளாக புணரமைக்காமல் கோயில் சிதைவடைந்த நிலையில், அனைத்து மக்களும் சேர்ந்து நிதிதிரட்டி குடமுழுக்கு நடாத்தியுள்ளனர்.
உலகெங்கும் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் பல்வேறு வகையில் பிரிவினைகளும் யுத்தங்களும் இடம்பெறுகின்ற நிலையில் இந்தக் கிராம மக்களின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றமை முக்கியமானது.
Link : https://namathulk.com