இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் தனுஷ்.
இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் ‘குபேரா’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் “தேரே இஸ்க் மெய்ன்” என்ற பாலிவுட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
முக்கியமாக ‘இட்லி கடை’ படத்தை தானே இயக்கியும் நடித்து வருகிறார்.
இதற்கு அடுத்தபடியாக தனுஷின் 55வது திரைப்படத்தை ‘அமரன்’ திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள நிலையில் அண்மையில் இந்த திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அமரன் திரைப்படத்தைப் போலவே இந்த திரைப்படமும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாம்.
Link : https://namathulk.com