படலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சபைத் தலைவர் அமைச்சர், பிமல் ரத்நாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது, படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
அத்துடன், தேவையான ஆலோசனைக்காக அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும்,படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ய ஜனாதிபதி ஒரு சிறப்புக் குழுவை நியமிப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த அறிக்கை குறித்து பொருத்தமான நேரத்தில் பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதத்தை நடத்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
Link : https://namathulk.com