முல்லைத்தீவு, மல்லாவி இளைஞன் படுகொலை செய்யப்பட்டு வவுனிக்குளத்தில் போடப்பட்ட விவகாரம் தொடர்பில், நீதி கோரி பொதுமக்கள், பொது அமைப்புக்கள், வர்த்தக சங்கம் இணைந்து மீண்டும் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மல்லாவி நகரில் மேற்கொண்டுவருகின்றனர்
வவுனிக்குளத்திலிருந்து கடந்த 30ஆம் திகதி அன்று சடலமாக மீட்கப்பட்ட முல்லைத்தீவு, யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை உறுதிப்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கொலையுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத நிலையில் குறித்த இளைஞனின் கொலைக்கு நீதி கோரி மல்லாவியில் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை கடந்த 16ஆம் திகதி முன்னெடுத்தனர்.
இருந்தபோதிலும், இதுவரை குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்து இன்று மீண்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com