வடசென்னை 2 இல் மணிகண்டனா?

Ramya
By
1 Min Read
வடசென்னை 2

இந்திய சினிமாவில் தமிழில் வெளியாகி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து பேசப்பட்ட திரைப்படம் வடசென்னை.

இப்போது இதன் இரண்டாம் பாகம் பற்றிய பேச்சுக்கள் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் வட சென்னை 2 திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதோடு அதனை வெற்றிமாறன் தயாரிக்க இருப்பதாகவும், அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கார்த்திகேயன் இயக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் குறித்த தகவல் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடசென்னை 2 பற்றி இப்போதைக்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வெற்றிமாறன் தயாரிப்பில் கார்த்திகேயன் இயக்கத்தில் மணிகண்டன் வேறொரு திரைப்படமொன்றில் நடிக்கவுள்ளதாகவும் ஆனால், அது ‘வடசென்னை 2’ இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *