ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹகராபிடிய – ஜம்புதென்ன பகுதியில் மூன்று வர்த்தக நிலையங்களில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
ஹாட்வெயார், மல்லிகைக்கடை மற்றும் மட்பாண்டம் விற்பனை நிலையம் என்பவற்றிலேயே இன்று 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
குறித்த, தீ விபத்தில் மல்லிகைக்கடை முற்றாக தீக்கிரையாகியுள்ளாகியதுடன், ஏனைய இரு கடைகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com