இந்தியாவின் தமிழ் நாட்டு அரசினுடைய 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினால் மார்ச் 13ஆம் திகதி வெளியிடப்பட்ட ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற நிதி நிலை அறிக்கைக்கான முன்னோட்டக் காணொளி அனைவரிடமும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் நிதி நிலை அறிக்கையில், திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க 133 லட்சம் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் இருக்கும் இளம் தமிழ்த் தலைமுறைகளுக்கு தமிழ் சார் மரபை அறிமுகப்படுத்துவதற்கு தமிழ் சார் ஆசிரியர்களுக்கும், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் 10 கோடி ரூபாய்களும், உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு 01கோடி ரூபாய்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதி நிலை அறிக்கைக்கான குறியீட்டில் ‘₹’ ற்குப் பதிலாக ‘ரூ’ எனும் குறியீடு மாற்றப்பட்டிருப்பது குறித்து அனைவரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த மாற்றம் தொடர்பாக, ‘திமுக, அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கருணாநிதி நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் நிதி நிலை அறிக்கை சமர்ப்பிப்புத் தொடர்பான எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்துள்ளது.
Link : https://namathulk.com