வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இன்று நிறைவு பெற்றது.
இன்று காலை இடம்பெற்ற விசேட வழிபாடுகளை தொடர்ந்து இராமேஸ்வரம் ஆயரினால் திருவிழா திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவு பெற்றதை அடுத்து இரு நாடுகளில் இருந்தும் வந்த இறை விசுவாசிகள் கச்சத்தீவில் இருந்து விடை பெற்றனர்.
இன்றைய திருவிழாவில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கடற்படை தளபதி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கச்சத்தீவு திருவிழாவை நினைவு கூறும் முகமாக தேவாலயம் அமைந்திருக்கக் கூடிய வளாகம் மற்றும் கடற்படை முகாம் அமைந்திருக்கக் கூடிய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதேவேளை திருவிழாவுக்கு வருகை தந்த இரு நாட்டு மக்களும் விடை பெற்று சென்றனர்.








Link: https://namathulk.com