கிளிநொச்சி, பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குறிஞ்சா தீவில் உப்பள உற்பத்தியை முன்னெடுப்பது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, குறிஞ்சா தீவில் இலங்கை உப்புக் கூட்டுத்தாபனமே உப்பளத்தை நடத்தவுள்ளதாக, உப்புக் கூட்டுத்தாபனத்தின் பொதுமுகாமையாளர் தெரிவித்தார்.
அந்தக் காணியை அளவீடு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதனை உப்புக்கூட்டுத்தாபனத்திடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர், வடக்கு மாகாண காணி ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
Link : https://namathulk.com