உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்காக, க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், சமூகத்தில் மனப்பான்மை மேம்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர், நந்திக சனத் குமாநாயக்க தலைமையில், சபாநாயகர் மற்றும் விவசாய அமைச்சுகளின் அதிகாரிகள் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, மக்களுக்கு பாதுகாப்பான உணவினை வழங்கும் வகையில், சுகாதார அமைச்சின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
தரமான மற்றும் சுகாதாரமான உணவை பெறுவதற்காக நுகர்வோர் உரிமையை நிலைநாட்டல், அதற்கான சூழலை நுகர்வோருக்கு உருவாக்குதல், நுகர்வோர் நம்பிக்கையை வளர்த்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், க்ளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக, தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் திட்டங்களை உணவு தரப்படுத்தலில் நடைமுறைப்படுத்தல் என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
Link : https://namathulk.com