மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள முறக்கொட்டான்சேனை காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் குழந்தையின் சடலம் இன்று மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்தே, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், பொலிசார் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவதினமான இன்று பிறந்த குழந்தையே இவ்வாறு வீசப்பட்டுள்ளதாகவும், பெற்றெடுத்து வீசிய பெண்ணை தேடிவருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
Link : https://namathulk.com