அம்பாந்தோட்டை, சூரியவெவ, மகாவலி பகுதியில் உள்ள காணியொன்றில் புதையல் தோண்டிய 9 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கடற்படை தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் சிவில் பொறியியலாளர் ஒருவரும் அடங்குவதாகவும், ஏனைய சந்தேக நபர்கள் மித்தெனிய மற்றும் சூரியவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 35இ மற்றும் 40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களுடன் வேன், முச்சக்கர வண்டி மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com