உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் நீதி நிலைநாட்டப்படும் என்று, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் நம்பிக்கை வெளியிட்டார்.
கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.
இதன்போது, நீதி உறுதி செய்யப்படாவிட்டால், வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிவரும் எனவும் பேராயர் எச்சரித்துள்ளார்.
நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வாக்குறுதிகளை அளித்தனர், ஆனால் அவர்கள் ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை எனவும் பேராயர் குற்றஞ்சாட்டினார்
இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, அன்று கட்டுவாப்பிட்டியில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்தில் ஜனாதிபதி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் அரசாங்கம் நியாயமான பதிலை வழங்கினால், பாதிக்கப்பட்டவர்கள் திருப்தி அடைவார்கள் எனவும் பேராயர் கூறினார்.
Link: https://namathulk.com