மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று, திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் பொலிசாரால் நேற்று மீட்கப்பட்டதுடன் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை தொடர்ந்து, பொலிசார் மேற்கொண்ட தேடுதல் மற்றும் விசாரணைகளின் போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து சுமார் 28 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த 28,29,33 வயதுடைய நபர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.




Link: https://namathulk.com