உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்றுமுதல் கையேற்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்றுமுதல் எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை மாத்திரமே வேட்புமனுக்களை சமர்பிக்க முடியும்.
நாடளாவிய ரீதியில் உள்ள 336 சபைகளுக்கே இன்று முதல் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
வேட்புமனுக்கள் ஏற்றக்கொண்ட பின்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறவுள்ளது.
Link : https://namathulk.com