கொழும்பு நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட கனேமுல்ல சஞ்சீவவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பாதுகாப்பிற்கு பொறுப்பாகவிருந்த பூசா சிறைச்சாலையின் அத்தியட்சகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சிறை அத்தியட்சகர் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
காலியில் உள்ள பூசா சிறைச்சாலையின் அத்தியட்சகர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பாதாள உலகக் குழு தலைவரான கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக துப்பாக்கிதாரி உட்பட பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இஷாரா செவ்வந்தி என்ற பெண் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
Link: https://namathulk.com