நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்னும் 24 நாட்களில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 10ஆம் திகதியளவில் வெளியாக உள்ள இத் திரைப்படமானது தமிழகத்தில் 1000 திரைகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் தயாரிப்பாளரான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தியிலும் இத் திரைப்படத்தை பரவலாக வெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.
Link : https://namathulk.com