2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது.
இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 4,74,147 பேர் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவர்களில் 3,98,182 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் எனவும் 75 ஆயிரத்து 968 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உரிய நேரத்திற்கு முன்பதாகவே பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறும், தேவையான உபகரணங்களை மட்டும் எடுத்துச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
பரீட்சைகளுக்கான விதிமுறைகளை மீறி எவராவது செயற்பட்டால் அது பரீட்சை குற்றமாக கவனத்திற் கொள்ளப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Link : https://namathulk.com