குறித்த ரீட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று முற்பகல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் புதிய நகர்த்தல் பத்திரம் ஒன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
தமது சேவை பெறுநரினால் வழக்கு தொடர்பான மேலதிக ஆவணங்கள் சமர்பிக்கப்பட உள்ளதாக குறித்த நகர்த்தல் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கால அவகாசத்தை பெற்றுத்தருமாரு கோரி புதிய நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன், தனது சட்டத்தரணிகள் ஊடாக கடந்த 12 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
Link: https://namathulk.com