திருகோணமலை கடற்கரையில் இளம் தம்பதியினரை அச்சுறுத்தி அவர்களின் கார் , பணம் மற்றும் நகைகளை மூன்று பேர் கொண்ட குழுவினர் நேற்று பகல் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன .
அதற்கமைய, கிண்ணியா பலத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது , திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையை சேர்ந்த 34,35 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளம் தம்பதியினரிடம் திருடப்பட்ட கார், அவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பவற்றுடன், சந்தேகநபர்கள் பயணித்த காரும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Link : https://namathulk.com